'பயங்கரமா வந்துருக்கு'.. சூர்யாவின் அடுத்த பட பாடல் குறித்து ஜிவி பிரகாஷ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூர்யாவின் அடுத்த படத்தின் ஒரு பாடல் கம்போஸ் பணி முடிந்து விட்டதாகவும், அந்தப் பாடல் பயங்கரமாக வந்திருக்கிறது என்றும் ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சூர்யா 46’ படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். "அந்தப் பாடல் பயங்கரமாக வந்திருக்கிறது என்றும், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள் என்றும்," அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"பொதுவாக ஒரு இயக்குனர் தனக்கு பிடித்து விட்டால், அந்த இயக்குனரின் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவேன் என்றும், அதுபோலத்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்தேன். மூன்றுமே சக்ஸஸ் ஆன படங்கள் என்றும்," அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் தான் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களில் பணியாற்றிய நான் தற்போது ‘சூர்யா 46 ’படத்திலும் பணியாற்றுகிறேன் என்றும், இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும்," அவர் கூறியுள்ளார்.
"#Suriya46 First single composition has completed✅. Bayangarama vandhuruku🥶. Like how I have associated with Adhik for #GBU after TIN & MarkAntony success. It's same with VenkiAtluri also for #Suriya46 after Vaathi & LuckyBhaskar success🔥"
— AmuthaBharathi (@CinemaWithAB) June 11, 2025
- #GVPrakashpic.twitter.com/XOaLOJtu9y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments