close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்

Saturday, September 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருவது விஜய்சேதுபதியும், ஜிவி பிரகாஷூம்தான். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்த 'நாச்சியார்', 'செம' ஆகிய படங்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது அவர் நடித்துள்ள '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்த நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த 'ஜெயில்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது, இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சிறப்பான ஒரு கதையில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி கூறியுள்ள ஜிவி பிரகாஷ், விரைவில் இந்த படத்தின் ரிலீசுக்காக எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் 'குப்பத்து ராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்', 'காதலை தேடி நித்யா-நந்தா' ஆகிய படங்களிலும் ஜிவி பிரகாஷ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.