கவுதம் மேனன் - விக்ரம் படம் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'துருவ நட்சத்திரம்' என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுதம் மேனனுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த படம் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கவுதம்மேனன் தரப்பு தெரிவித்துள்ளது.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் பிரமாண்டமான தயாராகவுள்ள இந்த படத்தை அவருடைய 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது

More News

ரூபாய் நோட்டு விவகாரம் திட்டமிடப்பட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை. மன்மோகன் சிங் பாய்ச்சல்

ஊழல் பணம், கருப்புப்பணம், கள்ள நோட்டுக்கள் ஆகியவற்றை ஒழிக்க மத்திய அரசு சமீபத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது...

வேந்தர் மூவீஸ் மதனுக்கு எத்தனை மனைவிகள்? காதலிகள் உண்டா? தாயார் விளக்கம்

கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது....

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதியின் 'கவண்' ரிலீஸ் எப்போது?

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடித்துள்ள 'கவண்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது...

முதன்முதலாக கவுதம் மேனனுடன் இணையும் பிரபல ஹீரோ

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, சரத்குமார், தனுஷ், சிம்பு, என ரஜினி, விஜய்...

பெங்களூரில் ஏ.டி.எம் பணத்துடன் காணாமல் போன வேன் கண்டுபிடிப்பு

நேற்று பெங்களூரில் உள்ள கே.ஜி. சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப வந்த வேன் ரூ.1.37...