பாரீஸில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படப்பிடிப்பு ஆரம்பம்

  • IndiaGlitz, [Tuesday,November 24 2015]

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் வெற்றி பெற்று வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில் இசையமைக்க மட்டுமின்றி அவருக்கு நடிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னை பாரீஸ் கார்னர் அருகே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

இயக்குனர் பாண்டியராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பானந்தா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், பாலசரவணன், மன்சூர் அலிகான் உள்பட மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையும் அமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டாரின் கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவு 12மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் 'விஜய் 60'...

கருணாநிதி, விஜயகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்...

அஜித், விஜய், சூர்யா குறித்து ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார்.

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'இசை' படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா விரைவில் வெளிவரவிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்...

டிசம்பர் 4 ரேஸில் இணைந்தது ஈட்டி

கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது...