மும்தாஜ்-சிவாஜி நடனம் ஆடுவது போல் படம் எடுக்கலாமா? கமலுக்கு எச்.ராஜா கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

நடிகை தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாக கூறி ஒருசில அமைப்புகள் அந்த படத்திற்கு எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. ஒருசிலர் எல்லை மீறி தீபிகாவின் தலைக்கு விலையும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் 'பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும்.  இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும்.  இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கருத்தை பாஜகவின் தேசிய தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.   சரித்திர நிகழ்வுகளை கொச்சைபடுத்தி படம் எடுத்ததை ஆதரித்து பேசிய கமலஹாசனின் செயல் கண்டிக்கத்தக்கது. சரித்திர நிகழ்வுகளை கேலி செய்வதற்கு கமலஹாசன் போன்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை

அவரவர் விருப்பத்துக்கு படம் எடுக்கலாம் என்றால் மும்தாஜும், சத்ரபதி சிவாஜியும் நடனமாடுவது போல படம் எடுக்கலாமா என்று கமல்ஹாசனுக்கு ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். இதற்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஆர்யாவின் திருமணம் குறித்த அவரே வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழ் திரையுலகில் ஆர்யா, விஷால் இருவரின் திருமணம் எப்போது என்று பலர் கேள்விகள் எழுப்பியுள்ளனர். நடிகர் சங்க கட்டிடம் முடிந்தபின்னர் தான் திருமணம்

நரகாசுரன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துருவங்கள் 16' என்ற சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது அடுத்த படமாக 'நராகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தளபதி 'மெர்சல்' படத்தின் உலகளாவிய மெர்சலான வசூல் விபரம்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும், ஒருசில அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பையும் பெற்றது.

மந்த்ராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் பாடல்கள் சமீபத்தில

மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சியான சந்திப்பு

நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பல்துறைகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்