பிரதமர் விளக்கேற்ற சொன்னது ஏன்? ஹெச்.ராஜா புதுவிளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசும்போது வரும் ஞாயிறு அன்று அனைவரும் இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறினார்

பிரதமரின் இந்த வேண்டுகோளை பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இது இதுகுறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் எம்பி டி.ஆர்.ரங்கராஜன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து கூறியதாவது:

நோய்நொடிகள் வெம்புலி போல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
என்று பாடினார் ஜீவா ...
இன்றும் மக்களின் நிலைமை இப்படியே இருக்க,
கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள்.
நமக்கு வாய்த்திருக்கும் பிரதமர்! என்று கூறியிருந்தார்.

ரங்கராஜன் எம்பி அவர்களின் இந்த கருத்துக்கு பதில் கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைவர் கூறியதாவது: ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர் ஹெட்கேவாரிடம் சங்கத்தை அரசு தடை செய்தால் என்ன செய்வீர்கள் என்ற போது அவர் சொன்னார். ஒன்றும் செய்ய மாட்டோம். ஷாகா நேரத்தில் அது நடைபெறும் இடத்தில் ஒருமணி நேரம் படுத்திருப்போம் என்றார். உடல் மட்டுமே படுத்திருக்கும், உள்ளம் சங்கப் பணி பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். அதேபோல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட உறுதியோடு ஒரு செயலைச் செய்யும் போது ஒற்றுமை, உற்சாகம் ஏற்படும். விளக்கேற்றுவதன் குறிக்கோள் அதுவே. ஆனால் இஸ்லாமைப் போன்ற மற்றொரு அடிப்படைவாத மதமான மார்க்சிய மதத்திற்கு இது புரியாது. என்ன செய்ய தங்களுக்கு வாய்த்த கொள்கை அப்படி. வணக்கம்’ என்று கூறியுள்ளார். வழக்கம்போல் இந்த இரண்டு கருத்துக்கும் நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களில் புகுந்து விளையாடி வருகின்றனர்.,

More News

10ஆம் வகுப்பு சிறுவனின் ஐடியாவை நிறைவேற்றுங்கள்: பாக்யராஜ் கோரிக்கை

சமீபத்தில் உபி மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சனை தீர அனைத்து

உபியில் ஒரே நாளில் 172 கொரோனா நோயாளிகள்: டெல்லி ரிட்டர்ன்ஸ் எத்தனை பேர்?

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன.

அனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அதனை பெரும்பாலான மக்களும் கடைபிடித்து வருகின்றனர்

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது 'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்