close
Choose your channels

விஜய்சேதுபதியுடன் இணைகிறாரா எச்.வினோத்?

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சதுரங்கவேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் எச்.வினோத், அதன் பிறகு கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தல அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கியுள்ள எச்.வினோத் மீண்டும் தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தல 61’ படத்தை முடித்துவிட்டு எச். வினோத், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதியின் கூறி எச்.வினோத் ஒப்புதல் பெற்று விட்டதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.