close
Choose your channels

கமலிடம் கதை சொல்லி காத்திருக்கும் இளைய தலைமுறை இயக்குனர்கள்: அடுத்த சான்ஸ் யாருக்கு?

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கதைசொல்லி இளம் இயக்குநர்கள் காத்திருக்கும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன் 2’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தை முடித்த பிறகு கமல்ஹாசனின் அடுத்த படம் எது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கமல்ஹாசன் அடுத்ததாக ’தேவர்மகன்-2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பா ரஞ்சித், கமல்ஹாசனிடம் மதுரை பின்னணி கொண்ட ஒரு கதையை சொல்லி இருப்பதாகவும் இந்த கதையை டெவலப் செய்யுங்கள் நிச்சயம் நாம் இணைந்து பணிபுரிவோம் என்று கமல்ஹாசன் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய எச்.வினோத், கமல்ஹாசனை சந்தித்து கதை சொல்லி இருப்பதாகவும் கமல்ஹாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பு விரைவில் இவருக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ’துணிவு’ படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார் என்றும், அதனை அடுத்து அவர் கமல்ஹாசன் படத்தை எச்.வினோத் இயக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கிறார். அதனை அடுத்து அவர் கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ள நிலையில் ’கைதி 2’ படத்தை முடித்த பிறகு ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இளைய தலைமுறை இயக்குனர்களான பா ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச் வினோத் ஆகியோர் கமல்ஹாசனிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.