தளபதியின் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: எச்.வினோத்

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்கள் மூலம் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எச்.வினோத், அஜித் படத்தை இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பை பெற்றார். அவர் இயக்கிய அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்தப் படத்தையும் அவர் இயக்க உள்ளார். 'தல 60' என்று அழைக்கப்படும் இந்த படம் ஒரு ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும், இந்தப் படத்தில் அஜித்தின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் வினோத், தளபதி விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் அந்த கதையை விஜய் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டதாகவும் அவரிடமிருந்து இந்த படத்தை இயக்க விரைவில் அழைப்பு வரும் என தான் காத்திருப்பதாகவும் எச்.வினோத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'பிகில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களும் முடிந்த உடன் எச்.வினோத்துக்கு விஜய் வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சாண்டியின் இன்னொரு முகத்தை சேனல் மறைக்கின்றது: கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி இதுவரை முதல் வாரத்திலிருந்து எந்த வாரத்திலும் நாமினேஷனில் சிக்கவில்லை. அவரை யாரும் இதுவரை நாமினேஷன் செய்ததாகவும் தெரியவில்லை

விஷாலின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி" 'கோமாளி' பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவு

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தில் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள்

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பாரில்' இணைந்த இளம் நடிகை!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்ட்ப்பிரிவு நீக்கம்: அமித்ஷா அரசாணை

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார்.