close
Choose your channels

'வலிமை' படப்பிடிப்பு: எச்.வினோத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ’வலிமை’ படத்தின் ஒருசில முக்கிய ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க எச்.வினோத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க அவர் முடிவு செய்திருந்தாகவும், இதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது திடீரென அவரது திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். ஒரு சில சேஸிங் காட்சிகள் வெளிநாட்டில் மட்டும்தான் படமாக்கப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும், அதில் பல சர்வதேச ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கு கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்றும், எனவே ஒருசில மாதங்கள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, அந்த காட்சிகளை வெளிநாட்டில் மட்டுமே படப்பிடிப்பு நடத்த எச்.வினோத் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச போலீசாக அஜித் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.