close
Choose your channels

ஆக்சன் காட்சி படப்பிடிப்பின்போது பிரபல நடிகை காயம்

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படமான 'மஹா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆக்சன் காட்சி ஒன்றில் டூப் இன்றி நடிகை ஹன்சிகா நடித்து கொண்டிருந்தபோத், திடீரென எதிர்பாராத வகையில் அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. கையில் ரத்தம் வந்த நிலையில் படக்குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினர். ஆனால் வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அன்றைய படப்பிடிப்பு முடியும் வரை ஹன்சிகா நடித்து முடித்தார்.

ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், நாசர், ஜெயபிரகாஷ், சாயாசிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜமீல் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.