close
Choose your channels

நயன்தாராவை முந்திய ஹன்சிகா.. பிப்ரவரி 10ஆம் தேதி ரிலீஸ்!

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய திருமணம் நடந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த வீடியோ ஒளிபரப்பாகவில்லை. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் ஹன்சிகாவின் திருமணம் நடந்த நிலையில் அவருடைய திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவுக்கு சோஹைல் கதுரியா என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் வந்திருந்தனர்.

இந்த நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த ட்ரெய்லர் வெளியான நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பிப்ரவரி 10ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அன்சிகா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.