ஹன்சிகாவை இளவரசியாக மாற்றும் 'மஹா'

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'. இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி வைரலானதில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பும் ஆரம்பமாகிவிட்டது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்க ஜிப்ரான் இசையமைக்கின்றார். இந்த படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: நிச்சயமாக ஹன்சிகா ஒரு இளவரசி தான். ஒரு இளவரசியின் அடிப்படை கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா.

நாயகி மையப்படுத்திய படங்களை கொடுக்கும் அளவுக்கு கமெர்சியல் மார்க்கெட்டை வைத்திருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க அவர் எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் நிச்சயம் பலன் அளிக்கும். இந்த படத்தில் பல குணங்களை கொண்ட மிக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.

மிகவும் வைரல் ஆன கண்ணாடி போஸ்டர் உண்மையில் சொல்வது, கண்ணாடியில் நீங்கள் பார்ப்பது அப்படியே உண்மை இல்லை, இது மாறும் என்பது தான். இதன் அடிப்படையில் தான் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

லக்ஷ்மன் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர், ஜிப்ரான் போன்ற ஒரு இசையமைப்பாளர் நல்ல படம் கொடுக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் நல்ல படமாகவும், வணிக ரீதியில் வெற்றி படமாகவும் அமையும் என நம்புகிறேன். நல்ல திறமையாளர்களை கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மதி சாருக்கு ஏற்ற வெற்றி இந்த படத்தில் கிடைக்கும் என்று கூறினார்.