close
Choose your channels

'ஜனநாயகன்' குறித்து பரவும் தகவல் பொய்யானது.. உறுதி செய்த பிரபலத்தின் தரப்பு..!

Saturday, May 3, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் கடைசி திரைப்படமான ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் பிரபல ராப் பாடகர் ஹனுமன்கிண்ட் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும், இந்த பாடல் ரசிகர்களை துள்ள வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஹனுமன்கிண்ட் தரப்பிலிருந்து வெளியான தகவலின் படி, ஜனநாயகன் படத்தில் அவர் பாடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"ஜனநாயகன் திரைப்படத்தில் ஹனுமன்கிண்ட் ஒரு பாடலை பாடி இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. அதுபோன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. பலர் தவறான தகவல்களை பகிர்ந்து கொள்வதால், விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment