பிரின்ஸ் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து, பெரிய திரையிலும் மாஸ் நடிகராக மாறலாம் என்ற உத்வேகத்தை பலருக்கு கொடுத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்த சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் பாண்டிராஜ் இயக்கிய ‘மெரீனா’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ், விமல் ஆகிய ஹீரோக்களுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனை கொடுத்த படம் ‘வருத்தப்படாத வாலிப சங்கம். அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.

மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்பட தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் உள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் லைகா தயாரிக்கும் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அவருடைய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் ஆண்டுகளிலும் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்கள் வெளியாக வேண்டும் என்று இந்த பிறந்த நாளில் வாழ்த்துகளை தெரிவிப்போம்.

More News

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நேற்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருந்த நிலையில்

தல ஃபேன்ஸ் கலக்கிட்டிங்கப்பா: ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

'அப்படி போடு லவ் லவ் லவ்': கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'அண்ணாத்த'

விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இசைஞாயின் ஸ்டுடியோவை பார்த்து, ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

இசைஞானி இளையராஜா கடந்த பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்கள் கம்போஸ் செய்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில்