40 ஆனால் நாட் அவுட்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் த்ரிஷா..!

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடித்த ’ஜோடி’ என்ற திரைப்படத்தில் சிம்ரன் தோழிகளில் ஒருவராக ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் சூர்யா நடித்த ’மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நாயகியாக நடித்த நிலையில் முதல் படமே அவர் ஏற்று நடித்த சந்தியா கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் விக்ரம் மற்றும் நடித்த ’சாமி’ திரைப்படம் அவரை உச்சத்துக்கு கொண்டு செல்ல அதனை அடுத்து இப்போது வரை அவர் பிஸியாக தான் இருக்கிறார் என்பதும் தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு நடிகை நாயகியாக தொடர்ந்து நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா காலத்தில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது அம்மா, அக்கா வேடத்தில் நடிக்க தொடங்கி அதன்பிறகு சீரியல்களுக்கும் சென்றுவிட்டனர். ஆனால் தமிழ் திரையுலகில் இன்னும் நாயகியாக அது மட்டும் இன்றி கமல்ஹாசன், விஜய், அஜித், மோகன் லால், டொவினோ தாமஸ், சிரஞ்சீவி உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்து வருகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.

நடிகை த்ரிஷாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலிருந்து தான் ஆரம்பமானது என்பதும் அந்த படத்தில் அவர் குந்தவையை அப்படியே ரசிகர்கள் கண் முன் நிறுத்தினார் என்பதும், அதன் பிறகு அவர் தொடர்ந்து மீண்டும் பிசியாகிவிட்டார்.

விஜய்யுடன் ’லியோ’ படத்தில் நடித்த த்ரிஷா, ‘விடாமுயற்சி’ படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். அதேபோல் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் உடன் ’ராம்’ படத்தில் நடித்து வரும் த்ரிஷா, டொவினோ தாமஸ் உடன் ‘ஐடெண்டிட்டி’ என்ற படத்திலும் தெலுங்கில் ’விஸ்வாம்பரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மொத்தத்தில் 40 வயது ஆகிய போதிலும் அவர் தென்னிந்திய திரையுலகில் நாட் அவுட் நடிகையாக இருந்து வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ரியோவுடன் மீண்டும் இணையும் 'ஜோ' நாயகி.. இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த விவரங்கள்..!

ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் நடித்த 'ஜோ' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும்

கரீனா கபூர் நடிக்கவிருந்த கேரக்டரில் நயன்தாரா? மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் இப்படி ஒரு கேரக்டரா?

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் கரீனா கபூர் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதில் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் ஒரு கலக்கல் புரமோ.. 4 நிமிட வீடியோவுடன் நெல்சன் - கவின் படத்தின் அறிவிப்பு..!

பொதுவாக நெல்சன் படம் என்றாலே புரமோ வீடியோ மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிந்தது. குறிப்பாக 'ஜெயிலர்'

மொரிஷியஸ் நாட்டில் இளையராஜா குடும்பம்.. யுவனுக்கு சாப்பாடு ஊட்டும் இசைஞானி..!

இசைஞானி இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் புகைப்படம் வைரல்

பட்ஜெட்டை விட 10 மடங்கு வசூல் செய்த 'கில்லி'.. ரீரிலீஸில் இப்படி ஒரு சாதனையா?

கடந்த 2004 ஆம் ஆண்டு 'கில்லி' படம் எடுக்க செலவான பட்ஜெட்டில் இருந்து தற்போது அந்த படம் 10 மடங்கு வசூல் செய்ய உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.