நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Friday,June 16 2017]

'நிஜமாத்தான் சொல்றியா' இந்த வசனத்தை எங்கே கேட்டாலும் உடனே 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலி பேசிய வசனம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். முதல் படத்திலேயே தனது நடிப்பு முத்திரையை பதித்து இன்று தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

'கற்றது தமிழ்' படத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பின்னர் அஞ்சலி நடித்த 'அங்காடி தெரு' படம் இன்னும் நம் கண்ணுக்குள்ளே இருக்கும் ஒரு படம். கனி என்ற கேரக்டரில் அவர் நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்தார் என்றே சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு கால் போய்விட்டது என்பதை அறிந்தவுடன் அவர் கதறி அழும் காட்சி கல்நெஞ்சோரை கூட கரைய செய்யும்.

இதன் பின்னர் 'தூங்கா நகரம்', மங்காத்தா, 'எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி போன்ற படங்கள் அஞ்சலியின் நடிப்பை வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

கற்றது தமிழ் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை மற்றும் அங்காடித்தெரு', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகை பிலிம்பேர் விருதுகளும் நந்தி விருது உள்பட பல விருதுகளையும் அஞ்சலி பெற்றுள்ளார்.

தற்போது பலூன், தரமணி மற்றும் பேரன்பு போன்ற படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகில் அஞ்சலி இன்னும் பல படங்களில் நடித்து சாதனை செய்ய இந்த இனிய பிறந்த நாளில் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

காலா படத்தில் ரஜினியின் பெயரில் மற்றொரு நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மும்பையில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது 'சென்னை 28' பட நடிகரும் வெங்கட்பிரபுவின் நண்பருமான அரவிந்த் ஆகாஷ் இணைந்துள்ளார்...

சூர்யா படத்தில் இணைந்த மேலும் ஒரு சீனியர் நடிகர்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்த நாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

கர்ப்பம் குறித்த வதந்திக்கு நஸ்ரியாவின் நச் விளக்கம்

'நேரம்', ராஜா ராணி' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தாலும் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கியவர் நஸ்ரியா.

அமலாபாலின் 'மின்மினி'க்கு என்ன ஆச்சு?

நடிகர் விஷ்ணு மற்றும் நடிகை அமலாபால் முதன்முறையாக இணையும் படம் ஒன்றுக்கு 'மின்மினி' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும், இந்த படத்தை முண்டாசுப்பட்டி' புகழ் ராம்குமார் இயக்கிவருகிறார்.

நடிகை ப்ரியா ஆனந்த் மீதான காதல் குறித்து கவுதம் கார்த்திக்

முத்துராமன், கார்த்திக் ஆகியோர்களை அடுத்து 3வது தலைமுறையாக கோலிவுட் திரையுலகில் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கவுதம் கார்த்திக். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'ரங்கூன்' நல்ல விமர்சனத்தை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது...