தமிழ் சினிமாவின் 'அழகன்' அரவிந்தசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,June 18 2017]

நடிகைகளில் எத்தனையோ பேர் அழகிகளாக இருந்தாலும் தமிழ் சினிமாவை பொருத்தவரையும் அழகு, ஸ்மார்ட், ஸ்டைல் உள்ள நடிகர்களில் மிகச்சிலரில் ஒருவர் அரவிந்தசாமி என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஒரு உண்மை. 'அழகன்' அரவிந்தசாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் அவருக்கு அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் அறிமுகமான அரவிந்தசாமி, முதல் படத்திலேயே ரஜினி, மம்முட்டி என சூப்பர் ஸ்டார்களுடன் மோதும் நேர்மையான கலெக்டர் கேரக்டரில் நடித்தார். இரண்டு சூப்பர் ஸ்டார் நடித்த ஒரு படத்தில் ஒருபுதுமுக நடிகர் பேர் வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது.

'தளபதி' வெற்றியை தொடர்ந்து அரவிந்தசாமி நடித்த 'ரோஜா' திரைப்படம் அவருக்கு இந்திய அளவில் புகழை பெற்று தந்தது. இதனையடுத்து அவர் நடித்த 'பம்பாய்' திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது எனலாம்

சுஹாசினி மணிரத்னம் இயக்கிய 'இந்திரா' திரைப்படம் அவரது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஒரு படம். மேலும் மின்சாரக்கனவு, புதையல், சிறப்பு தோற்றத்தில் 'அலைபாயுதே' ஆகிய படங்கள் அரவிந்தசாமி நடித்த குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.

இதன் பின்னர் சுமார் 10 வருடங்கள் அரவிந்தசாமி திரைபப்டங்களில் நடிக்கவில்லை. 2013ஆம் ஆண்டு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் 'கடல்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அரவிந்தசாமி நடித்த 'தனி ஒருவன்' படத்தின் வெற்றி அவரை மீண்டும் கோலிவுட்டில் பிசியாக்கியது. தற்போது அவர் 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டின் பிசியான நடிகராக உள்ளார். தமிழ்த்திரையுலகில் அவர்

More News

64வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது பெற்ற நட்சத்திரங்கள். முழு விபரம்

தேசிய விருதை அடுத்து திரை நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் ஒரு விருது என்றால் அது பிலிம்பேர் விருதுதான்...

நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை: நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் வழக்கு, முறைப்படி இன்று நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.

குடியரசு தலைவராக மீண்டும் ஒரு விஞ்ஞானி?

இந்திய குடியரசு தலைவர்களில் பெஸ்ட் யார் என்று கேட்டால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது அப்துல்கலாம் அவர்கள் தான். முதன்முறையாக ஒரு விஞ்ஞானி, எந்த கட்சியையும் சார்பில்லாத ஒரு குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாடே பெருமை அடைந்தது...

தமிழர் அல்லாதவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? கஸ்தூரியின் நெத்தியடி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை கஸ்தூரி பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்...

இந்தியா-பாகிஸ்தான் ஃபைனல்: பணமழையில் நனையும் தனியார் சேனல்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனப்பான்மை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது...