காமெடி நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Thursday,August 27 2015]

தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக கடந்த சில வருடங்களாக கொடி கட்டி பறந்த நடிகர் சந்தானம், தற்போது காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ளதால், காமெடி வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ள நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

காமெடி நடிகர் சூரி, கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தாலும், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி காமெடி காட்சியில்தான் புகழ்பெற்றார். அந்த படத்திற்கு பின்னர் அவர் சில ஆண்டுகள் 'புரோட்டா சூரி' என்றே அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் களவாணி, தூங்கா நகரம், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, வாகைசூடவா போன்ற பல படங்களில் நடித்த சூரி, இளையதளபதி விஜய்யுடன் வேலாயுதம், சூரி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார்.

தற்போது பிசியான காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் சூரி, இளையதலைமுறை நடிகர்களான விஷால், விஷ்ணு, விக்ரம்பிரபு, விமல், சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த சகலகலாவல்லவன் இவருடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது என்றே கூறலாம். இதேபோல் இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து மென்மேலும் புகழ்பெற இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

விஜய் சீனியர் நடிகர் இல்லை. ஹன்சிகா

விஜய்யுடன் வேலாயுதம், புலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஹன்சிகாவிடம் சமீபத்தில் 'சீனியர் நடிகரான விஜய்யுடன்...

கிளைமாக்ஸை நெருங்கியது 'தல 56'

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ராமி மால் மற்றும் தனியார் மருத்துவமனை...

குடியும் குடித்தனமும்' டைட்டிலுக்கு மறுப்பு தெரிவித்த எம்.ராஜேஷ்

சமீபத்தில் எம்.ராஜேஷ் இயக்கிய 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்...

ஸ்ரீதேவி புலிகபூர் ஆக மாறிய ஸ்ரீதேவி போனிகபூர்

விஜய் நடித்துள்ள 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றால் அது ஸ்ரீதேவி கேரக்டர்தான் என படக்குழுவினர் அனைவரும் கூறி வரும் நிலையில்...

அரசு செலவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம். முதல்வர் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருது பெற்று தமிழர்களுக்கும்...