'பசங்க' பாண்டிராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Wednesday,June 07 2017]

கோலிவுட் திரையுலகில் இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ். இன்று பாண்டிராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாளை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த 2009ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படமான 'பசங்க' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது, சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது, சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருது என மூன்று தேசிய விருதினை குவித்தது.

அதன்பின்னர் இவர் இயக்கிய அருள்நிதி அறிமுகமான 'வம்சம்', 'சிவகார்த்திகேயன் அறிமுகமான 'மெரீனா' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதுடன் அருள்நிதி, சிவகார்த்திகேயன் இருவருமே இன்று மிகப்பெரிய நடிகர்களாக கோலிவுட்டில் வளர்ந்துள்ளனர்.

மேலும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', இது நம்ம ஆளு, கதகளி, பசங்க 2 ஆகிய வசூல் ரீதியான வெற்றிப்படங்களும் பாண்டிராஜ் இயக்கிய படங்கள் தான். மேலும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கோலிசோடா' படத்திற்கு வசனம் எழுதியவரும் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாண்டிராஜ் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'செம' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இன்றைய பிறந்தநாளில் இயக்குனர் பாண்டிராஜ் மேலும் பல படங்களை தயாரித்தும், இயக்கியும் பல விருதுகளை வென்று குவிக்க மீண்டும் ஒருமுறை அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

தமிழகத்தில் ஒரு நிர்பயா! ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு நாடே கொந்தளித்தது. பாராளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும், பெண்கள் அமைப்பினர்களும் குவிந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது...

அவங்க ஆட்டம் செம சூப்பர்: நடிகை சாயிஷாவை பாராட்டும் பிரபலம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகி சாயிஷா நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான். ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் ஒப்பந்தமானதோடு இன்னும் இரண்டு தம

அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வையுங்கள். பெற்றோர்களுக்கு காமெடி நடிகர் வேண்டுகோள்

பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர்களும் ஏழைகளும் தனியார் பள்ளியில் தங்களை குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்றே இந்த காலத்தில் விரும்புகின்றனர். எல்.கே.ஜி படப்பிடிப்பிற்கே லட்சக்கணக்கில் பணம் கறக்கும் தனியார் பள்ளிகளில் கடன் வாங்கி தங்களுடைய குழந்தைகளை சேர்த்துவிட்டு பின்னர் கஷ்டப்படும் பல பெற்றோர்களை நாம்

அஜித்தின் ஹாலிவுட் முன்னோடி நடிகருக்கு இரட்டை குழந்தை

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே நிஜத்திலும் சரி, திரைப்படங்களிலும் சரி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தான் இருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவுடன் சீரியஸாக விவாதம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பெண்ணுரிமை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தனது மனதில் தோன்றும் கருத்துக்களை பின்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர்...