பிரகாஷ்ராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்கள்

  • IndiaGlitz, [Sunday,March 26 2017]

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகில் சோடை போனதில்லை என்பது வரலாறு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பாலசந்தர் கண்டுபிடித்த இன்னொரு நட்சத்திரம்தான் பிரகாஷ்ராஜ். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாளை தெரிவித்து கொள்கிறோம்.

கே.பாலசந்தரின் 'டூயட் படத்தில் அறிமுகமான பிரகாஷ்ராஜ், அதன் பின்னர் ஆசை, கல்கி, விடுகதை, என் சுவாச காறே, படையப்பா, அப்பு, வாஞ்சிநாதன், கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அன்னியன் உள்பட பல படங்களில் முக்கிய வேடம் ஏற்று தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தியவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துவருபவர்.

நடிகர் மட்டுமின்றி தயாரிப்பு மற்றும் இயக்குனராகவும் பிரகாஷ்ராஜ் திரையுலகில் ஜொலித்துள்ளார். தோனி, உன் சமையல் அறையில் போன்ற படங்களை இயக்கியுள்ள பிரகாஷ்ராஜ், அழகியதீயே, மொழி, அபியும் நானும், பயணம், உள்பட பல தரமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமின்றி சமூக சேவையிலும் அதிக நாட்டமுள்ள பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டரப்பள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்.

'காஞ்சிவரம்' படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், 'இருவர்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற பிரகாஷ்ராஜ் மேலும் பல விருதுகளை வென்று இந்திய திரையுலகில் மென்மேலும் ஜொலிக்க இந்த இனிய பிறந்த நாளில் அவரை வாழ்த்துகிறோம்.

More News

இலங்கை பயணம் ரத்து: ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்..

ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக சற்று முன் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்க

ரஜினி ஒரு கோழை. சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று நேரத்திற்கு முன்னர் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்தார்...

இலங்கை செல்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு

லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் இலங்கையில் கட்டியுள்ள 150 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று ஒருசிலர் அரசியல் தலைவர்களும், செல்ல வேண்டும் &#

ஃபேஸ்புக்கில் காதலித்து தியேட்டரில் கல்யாணம் செய்த பெண்ணின் கணவர் திடீர் மாயம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அந்த காலம். தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் காதலித்து கல்யாணம் செய்வதுதான் டிரெண்டாக உள்ளது.

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியுடன் விஷால் டீம் சந்திப்பு

வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.