பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிபிராஜ்

  • IndiaGlitz, [Friday,October 06 2017]

புரட்சி தமிழன் சத்யராஜ் மகனும், இளையதலைமுறை நடிகர்களில் ஒருவருமான சிபிராஜ் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz சார்பில் அவருக்கு எங்களது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கடந்த 2003ஆம் ஆண்டு 'ஸ்டண்ட் நம்பர் 1' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிபிராஜ், அதன் பின்னர் ஒருசில படங்களில் தந்தை சத்யராஜூடன் இணைந்து நடித்து வந்தார். பிரபுசாலமன் இயகக்த்தில் சிபிராஜ் நடித்த 'லீ' திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 'நாய்கள் ஜாக்கிரதை' படம் தான்

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சிபி, 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவை காணோம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்யா, ரங்கா ஆகிய படங்களில் நடித்து வரும் சிபி, இன்னும் பல வெற்றி படங்களில் நடித்து புகழும் விருதுகளும் பெற இந்த இனிய பிறந்த நாளில் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

தளபதியின் 'மெர்சலுக்கு புகழாரம் சூட்டிய பிரமாண்ட இயக்குனர்

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி விஜய்யின் 'மெர்சல்' படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று வாழ்த்துக்கள் கூறி அந்த படத்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்

பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம். ஓவியா

பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் தினமும் அவர் ஏதாவது ஒரு விஷயத்திற்காக டிரெண்டில் உள்ளார்

மருத்துவ கல்லூரி மாணவிக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எந்த ஒரு சமூக பிரச்சனைகளுக்கும் திரையுலகில் இருந்து குரல் கொடுக்கும் முதல் நபராக இருந்து வருகிறார்.

சந்தானம், சிம்புவுடன் இணைந்த ராஜூ சுந்தரம்

சந்தானம் நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடலான 'கலக்கு மச்சான்' சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது.

வியட்நாம் மொழியில் டப் ஆகும் 'ஸ்பைடர்: ஏன் தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.