'சகலகலாவல்லவர்' டி.ராஜேந்தருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளிலும் ஆரம்பம் முதலே ஈடுபட்டு வரும் சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கடந்த 1980ஆம் ஆண்டு 'ஒருதலை ராகம்' படத்தில் பாடல்கள்-இசை அமைத்து தனது கோலிவுட் பயணத்தை தொடங்கிய டி.ராஜேந்தர் என்னும் தன்னம்பிக்கை உதாரணமான உன்னத கலைஞன், அதன் பின்னர் 'ரயில் பயணங்களில்', 'நெஞ்சில் ஒர் ராகம்', 'ராகம் தேடும் பல்லவி' ஆகிய படங்களை இயக்கினார்.

டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படங்களில் சூப்பர் ஹிட் ஆன முதல் படம் என்றால் அது 'உயிர் உள்ளவரை உஷா' படம்தான். இந்த படத்தில் தான் நடிகை நளினி அறிமுகமானார். அதன்பின்னர் 'தங்கைக்கோர் கீதம்', டி.ராஜேந்தர் இருவேடங்களில் நடித்த 'உறவை காத்த கிளி', நடிகை அமலா அறிமுகமான 'மைதிலி என்னை காதலி', ' ஒரு தாயின் சபதம்', 'என் தங்கை கல்யாணி' என வரிசையாக வெற்றிப்படங்களை இயக்கினார்.

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு, டி.ராஜேந்தரின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், அவரது இயக்கத்தில் கதாநாயகனாக 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.ராஜேந்தர் நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி ஒரு சிறந்த பாடகரும் கூட. சமீபத்தில் வெளியான 'கவண்' படத்தில் இவர் பாடிய 'ஹேப்பி நியூ இயர்' பாடல் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

தமிழ் சினிமாவில் அபூர்வமாக அனைத்து துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுபவர் ஒருசிலரே. அப்படிப்பட்டவர்களில் ஒருவரான டி.ராஜேந்தர் சினிமாவில் சாதித்தது ஏராளம் என்றாலும், அவர் இன்னும் பல உச்சத்தை தொட இந்த இனிய பிறந்த நாளில் நமது வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறோம்.

More News

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை. சுப்ரீம் கோர்ட் அதிரடி

கடந்த சில மாதங்களாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் அவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது...

உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்த்த தமிழ் சினிமா

இன்று மே-1, உழைப்பாளர்கள் தினம். வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளர்களை பெருமைப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு நாள் கொண்டாடப்படும் தினம்.

தல-தளபதி குறித்து பிரபல நடிகை-அரசியல்வாதியின் கருத்து

தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக இருக்கும் தல அஜித் மற்றும் இளையதளபதி விஜய் குறித்த செய்திகள் வராத நாளோ அவர்களை குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நாளோ இதுவரை இருந்ததில்லை...

உலகப்புகழ் பெற்ற அதிரடி மன்னன் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் இந்திய சினிமாவில் ஹிட்டாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் திரைப்படமாகவுள்ளது...