பழம்பெரும் நடிகைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய உலக நாயகன்

  • IndiaGlitz, [Saturday,January 07 2017]

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பழம்பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவரும் 'கன்னடத்து கிளி' என்று அழைக்கப்படுபவருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகில் உள்ள முத்த கலைஞர்களும், இளையதலைமுறையினர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் சரோஜாதேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரோஜாதேவி அம்மா. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். விரைவில் உங்களை சந்திக்கின்றேன்' என்று கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த 'பார்த்தால் பசிதீரும்' என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சரோஜாதேவியுடன் கமல் நடிக்கவில்லை என்றாலும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்களில் கமலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பொங்கல் ரேசில் இருந்து விலகிய படத்திற்கு 'யூ' சான்றிதழ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'பைரவா' படத்துடன் கனெக்சன் ஆகும் வெற்றிமாறன் - ஜிவி பிரகாஷ்

கடந்த ஆண்டு வெளியான 'விசாரணை' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை உலக அளவில் கொண்டு சென்றவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு சென்ற படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது.

இயக்குனர் கே.பாக்யராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர், இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வருகிறார்.

உதயநிதி படத்திற்கு எம்.ஜி.ஆர் டைட்டில்

நடிகர் உதயநிதி நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

மும்பைக்கு த்ரிஷா, கோவைக்கு ரோஹினி

கடந்த 2008ஆம் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் கதையான '1818' என்ற படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமானார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்