ஹேப்பி பர்த்டே டு மீ : விஷ்ணு விஷால் அடுத்த படத்தின் திகில் வீடியோ!

  • IndiaGlitz, [Sunday,July 17 2022]

விஷ்ணு விஷால் நடித்த ’எப்.ஐ.ஆர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படமான ’மோகன்தாஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கையில் சுத்தியல் மற்றும் கத்தியை வைத்துக்கொண்டு தொடர் கொலை செய்யும் விஷ்ணு விஷாலின் திகில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவில் பின்னணியில் 'ஹேப்பி பர்த்டே டூ மீ’ என்ற குரல் ஒலித்துக் கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் விஷ்ணு விஷாலின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாறன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், ஜிப்ரான் இசையில், கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோ: அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

பிரபல நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியிட்டுள்ள வீடியோவை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிவி தொடருக்காக ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல்: செம வைரல்

தமிழ் திரையுலகின் பிஸியான நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தொலைக்காட்சி தொடருக்காக கம்போஸ் செய்த ஒரு பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

எச்.வினோத் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

எச் வினோத் இயக்கிய 'சதுரங்க வேட்டை' என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'சதுரங்க வேட்டை 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ருதிஹாசனின் முதல் மேடை: குட்டிப்பெண்ணாக இருக்கும்போதே அசத்திய வீடியோ வைரல்!

 உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் குட்டிப் பெண்ணாக இருக்கும் போது ஏறிய முதல் மேடை குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ்: 'கே.ஜி.எப்' நடிகையின் வைரல் புகைப்படம்!

'கே.ஜி.எப்'  உள்பட பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்த நடிகை ஒருவர் திருமணமான ஆறே மாதத்தில் டாப்லெஸ் போஸ் கொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.