முதலிடத்தை பிடித்த 'ஹரிஹர மகாதேவி'

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

கேளிக்கை வரிவிதிப்பு காரணமாக புதிய திரைப்படங்களை வெளிடுவதில்லை என்ற தமிழ் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு காரணமாக கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த ஆயுதபூஜை திருநாளில் வெளியான படங்களில் கடந்த வார வசூலை பார்க்கும்போது கவுதம் கார்த்திக்கின் 'ஹரஹர மகாதேவகி' முதலிடம் பிடித்துள்ளது.

இந்த படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் 15 திரையரங்குகளில் 166 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.51,64,392 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் கடந்த 29ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 7ஆம் தேதி அரை ரூ.1,32,95,516 வசூல் செய்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த வார வசூலில் முதலிடம் பிடித்துள்ளது படக்குழுவினர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

மகனின் உயிரை காப்பாற்றிய தந்தையின் ஒரே ஒரு டுவீட்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை அரட்டை அடிக்கும் பொழுது போக்கு தளங்களாக இருந்த நிலைமை மாறி ஆக்கபூர்வமான பல விஷயங்களுக்கு உதவுகிறது என்பதை பல உதாரணங்களில் இருந்து பார்த்திருக்கின்றோம்.

'மாரி 2' படத்துக்கு மறுப்பு தெரிவித்தாரா அனிருத்?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கவுள்ள 'மாரி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த படத்தின் வில்லன் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் என்றுமுடிவாகியுள்ளது

ஓவியாவுக்கு ரொம்ப பிடித்தவர் யார்? பிடிக்காதவர் யார்?

பொதுவாக எந்த நடிகர், நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? நடிகை யார்? என்ற கேள்வி இருக்காமல் அந்த பேட்டி முழுமை அடையாது.

பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் போக வேண்டாம் என தடுத்தவர் இவர்தான்: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகியான ஓவியா, இடையில் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் அந்த வீட்டை விட்டு வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஓவியா எந்தெந்த படத்தில் நடிக்கிறார்: அவரே அளித்த பதில்

பிக்பாஸ் புகழ் ஓவியா பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பல செய்திகள் அடுக்கடுக்காக தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.