இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து…. அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

ஐ.நா.வின் காலச்சார அமைப்பான யுனெஸ்கோ குஜராத் பகுதியில் உள்ள “தோலவிரா“ எனும் நகரத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே பழைய நாகரிமான ஹரப்பா நாகரிகம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். இந்த பழமையான நாகரிகம் அமைந்திருந்த குஜராத்தின் “தோலவிரா’‘ எனும் பகுதிக்குத்தான் தற்போது யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்தை வழங்கி இருக்கிறது.

தெற்காசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க நகர நாகரிகங்களில் ஒன்றான இந்த ஹரப்பா நாகரிகம் கி.மு. 3- 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தனை பழமையான இந்த நகரத்தில் நீர் மேலாண்மைக்கான அமைப்பு, பல அடுக்கு கொண்ட தற்காப்பு வழிமுறைகள், கட்டுமானங்கள் என மனித நாகரிக வரலாற்றிலேயே மிகவும் தனித்துவம் பெற்ற நவீன வளர்ச்சியை பார்க்க முடியும்.

மேலும் கடந்த 1968 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த நகரத்தில் செம்பு, கிளிஞ்சல்கள், கல், விலைமதிப்பற்ற கற்களின் நகைகள், டெரகோட்டா, தங்கம், தந்தங்கள் எனப் பழைய நாகரிகத்தைப் பறைசாற்றும் பல அரியப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கியமானது இந்த ஹரப்பா நாகரிகம். இந்தியாவின் முக்கிய தொல்பொருள் தளமாக விளங்கும் இந்த நாகரிகப் பகுதியை தற்போது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளங்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. இதைத்தவிர தெலுங்கானாவின் ககாதியா ருத்ரேஷ்வரா கோயிலும் பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் உள்ள பாரம்பரியத் தளங்கள் 40 ஆக உயர்ந்து இருக்கின்றன.