முதல் அடி எப்போதும் இந்த பேட்டையோட அடிதான்: வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீரர்கள் டுவீட்

  • IndiaGlitz, [Sunday,March 24 2019]

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நேற்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டியில் எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர்களின் அபார பந்துவீச்சு என்று கூறினால் மிகையாகாது. இருவரும் அதிரடியாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்டுக்களை எடுத்ததால் பெங்களூர் அணி 70 ரன்களுக்கு சுருண்டது

இந்த நிலையில் ஐபிஎல் போட்டி ஆரம்பிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பிருந்தே ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் தமிழில் டுவீட் போட்டு அசத்திய நிலையில் நேற்றைய வெற்றிக்கு பின் இருவரும் தமிழ் சினிமா வசனங்கள் பாணியில் டுவீட்டை பதிவு செய்துள்ளனர்.

இம்ரான் தாஹிர் பதிவு செய்த டுவீட்டில், ' நீ திரும்பவும் எங்கள தொட்டு இருக்க கூடாது. தொட்டுட்ட. தொட்டவன நாங்க விட்டது இல்ல. தப்பு பண்ணிட்ட சிங்காரம். முதல் அடி எப்பவும் இந்த பேட்டயோட அடி தான்' என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் ஹர்பஜன்சிங் பதிவு செய்த டுவீட்டில், 'ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருப்பேன்னு நெனச்சியா. பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட்ட எடுத்து பாரு. பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ். என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ரோல்லிங் சார்! தந்தானி நானே தானி தந்தானோ என்று கேஜிஎப் படத்தின் தீம் மியூசிக்குடன் தனது டுவிட்டை முடித்துள்ளார்.

இந்த இரண்டு டுவீட்டுக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஐபிஎல் போட்டியை பார்க்க  வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டு வாரிசுகள் மோதும் தென்சென்னை! வெற்றி யாருக்கு?

வாரிசு அரசியல் செய்வதாக ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை குற்றஞ்சாட்டியபோதிலும், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் தங்களுடைய வாரிசுகளைத்தான் களமிறக்கியுள்ளது.

சியாச்சின் மலைத்தொடரில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!

சமீபத்தில் புல்வாமா பகுதியில் தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதியின் தாக்குதலுக்கு 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது ராஜதந்திரம்: தமிழக அமைச்சர்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்

கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்த இன்னொரு அரசியல் கட்சி

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி நிலையில், ஒரே ஆண்டில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளார்.