close
Choose your channels

தமிழ் திரைப்படத்தின் ஹீரோவாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் டுவீட் செய்து தமிழ் மக்களை கவர்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சந்தானம் நடித்து வரும் ’டிக்கிலோனா’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சமீபத்தில் ஹர்பஜன் சிங் ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஹர்பஜன் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ’பிரண்ட்ஷிப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் தயாரித்து வருகிறார்கள்.

ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் தமிழில் கூறியதாவது: நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ’பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம். அசத்துவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.