யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன்: விவேக் மறைவு குறித்து ஹர்பஜன்சிங்!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் பிரபலங்களும், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் நேற்று மாலை நடந்த அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் கலந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் பிரபலங்களும் சிலர் தங்களுடைய இரங்கல் செய்தியை குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் ஹர்பஜன்சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் விவேக் குறித்து கூறியுள்ளனர்.

ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் பழமொழி உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்..பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது: மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும் அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது ஒரு சிலரை இழக்கும் போது மட்டும். திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துகளை கொண்டு சேர்த்த ஒரு லெஜெண்ட். தனிப்பட்ட முறையில் எனக்கு ’மின்னலே’ மற்றும் ’ரன்’ ஆகியப் படங்கள் மிகவும் பிடிக்கும். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

More News

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த விபரீதம்!

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு முகமெல்லாம் வீங்கி விபரீதம் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது

இந்த 10 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம்...!சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்....!

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என, சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் செய்த விஷயம்...!மகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...!

வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜயகாந்த், அந்த விஷயத்திற்கு சரி என்று சொல்லியுள்ளதால் அவர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்து உள்ளது.

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்!

மாரடைப்புக் காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்தார்.