அஜித் வசனம், ரஜினி நடனம்: மாஸ் காட்டிய ஹர்பஜன்சிங்

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும், அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் பதிவு செய்யும் தமிழ் டுவீட்டுக்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்ததே! அந்த வகையில் நேற்று டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி துவம்சம் செய்தது. இதனையடுத்து நேற்றைய வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் பதிவு செய்த டுவீட்டில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' படம் வசனமும், ரஜினியின் டான்ஸ் புகைப்படமும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹர்பஜன்சிங் டுவீட் இதுதான்: இஞ்யார்ரா, பேரு சிஎஸ்கே, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து ஐபிஎல்ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் ஃபேன்ஸ்! நாங்களும் தயார்! என்று பதிவு செய்துள்ளார்.

இதேபோல் இம்ரான் தாஹிர் பதிவு செய்துள்ள டுவீட்டில், 'சில பேரு செஞ்சிட்டு சொல்றாங்க. நாங்க செய்யறதும் தெரியாது, சொல்றதும் தெரியாது. எல்லாரும் எதிர்பார்க்கறத நாங்க செய்ய மாட்டோம். நாங்க செய்யப்போறது என்னன்னு யாரும் எதிர்பார்க்கவும் முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசிலை என்று பதிவு செய்துள்ளார்.

More News

சூர்யாவுக்காக பக்கா மாஸ் ஸ்கிரிப்ட் ரெடி: பிரபல இயக்குனர்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படமும், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படமும் அடுத்தடுத்த ஒரு சிறு இடைவெளியில் வெளியாகவுள்ளது.

தங்க மகள் கோமதி மாரிமுத்துவிற்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது!

திருச்சி மாவட்டம் முடி கண்டம் என்கிற அடிப்படை வசதிகள் இல்லாதா சாதாரண கிராமதில் பிறந்து, வறுமையை தோக்கடித்து,

பேஸ்புக் காதல் விபரீதம்! பிளான் போட்டு கழட்டி விட்ட காதலன்!  விபரீத முடிவு எடுத்த கல்லூரி மாணவி!

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, கல்லூரி மாணவியை ஏமாற்றிவிட்டு காதலன் தலைமறைவானதால் அபிநயா என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடவுள் உங்கள் பக்கம்தான்: அஜித்துக்கு வாழ்த்து கூறிய போனிகபூர்!

தல அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அதிகாலை சரியாக 12.00 மணி தொடங்கியதில் இருந்தே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அக்காவை காதலித்துவிட்டு மூன்று தங்கைகளை கர்ப்பமாக்கிய கில்லாடி இளைஞர்

சேலத்தில் காதலித்த பெண்ணின்  தங்கைகள் மூன்று மூன்று பேரை கர்ப்பமாக்கி இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.