ஆனந்தக்கண்ணீருடன் மீண்டும் வந்துவிட்டேன்: ஹர்பஜன்சிங்


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல் போட்டியில் விளையாடும் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இடம்பெற்று இருந்த முக்கிய வீரரான ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் தமிழில் டுவீட் போட்டு அசத்தி வந்தார் தெரிந்ததே. கடந்த ஆண்டு இவர் பதிவு செய்த தமிழ் டுவிட்டுக்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டும் இவர் தனது தமிழ் டுவீட்டுக்களை ஆரம்பித்துவிட்டார். இன்று அவர் பதிவு செய்த டுவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது 'என்று ஹர்பஜன்சிங் பதிவு செய்துள்ளார்.
பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என்னருமை @ChennaiIPL ரசிகர்களே மீண்டும் @ipl ல் பங்கேற்க தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன்.ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான் அதே
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 16, 2019
உணர்வு தான் என்னுள் இப்போது #WhistlePodu @CSKFansOfficial pic.twitter.com/zkyKiP0ToN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments