close
Choose your channels

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா! சிஎஸ்கே கிட்ட வாங்காத ஊமக்குத்தா: ஹர்பஜன்சிங் டுவீட்

Wednesday, April 10, 2019 • தமிழ் Comments

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இருந்தே சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் தமிழில் டுவிட்டுக்களை பதிவு செய்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னை அணி வெற்றி பெறும் போட்டிகள் முடிந்த பின்னர் அவர் பதிவு செய்யும் டுவீட்டுக்கள் பெரும் வரவேற்பை பெறும்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது. குறிப்பாக இந்த போட்டியில் ஹர்பஜன்சிங் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் அவர் தல அஜித்தின் 'விஸ்வாசம்' பாடல் பாணியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது:

அப்பத்தா அம்மத்தா கொல்கத்தா! @chennaiiplட்ட வாங்காத ஊமக்குத்தா. மூணு நாள்ல சொன்ன மீட்டு! இப்ப முச்சந்தில உக்காந்து முக்காடு போடவெச்சுருச்சா #தல வேட்டு #CSKvKKR அங்காளி பங்காளி வா, இனி ஆட்டம் தான் எப்போதும் அடி அடி #CSK மேட்சுனாலே வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா, இப்ப சொல்லு நாங்க கெத்தா என்று ஹர்பஜன்சிங் பதிவு செய்துள்ளார். 

ஹர்பஜன்சிங்கின் இந்த டுவீட்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz