close
Choose your channels

மடியில் கர்ப்பிணி மனைவி, ஆனால் முத்தம் மட்டும் வேறொருவருக்கு! வைரலாகும் ஹர்திக் பாண்ட்யா புகைப்படம்

Saturday, July 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியா, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நடாஷா என்ற நடிகையை திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். மேலும் தன்னுடைய புதிய குடும்ப உறுப்பினரை வரவேற்க தான் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது கர்ப்பிணி மனைவி குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் ஹர்திக் பாண்டியா தற்போது புதிய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கர்ப்பிணியான நடாஷா தனது மடியில் படுத்திருக்கும் இருக்கும் நிலையில் செல்ல நாய்க்குட்டிக்கு ஹர்திக் முத்தம் கொடுக்கும் புகைப்படமாக அது உள்ளது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ’எனது குடும்பம்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

இந்த புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி குவிப்பதோடு, க்யூட் தம்பதிகள் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.