இது வெறும் ஆரம்பம் மட்டுமே.. தங்கக்காப்பு பரிசளித்து வாழ்த்திய ஹரிஷ் கல்யாண்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனருக்கு தங்க காப்பு பரிசளித்த ஹரிஷ் கல்யாண் ’இது வெறும் ஆரம்பம் மட்டுமே, இன்னும் பல வெற்றிகள் உங்களுக்காக காத்திருக்கிறது’ என்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ ’தாராள பிரபு’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் அவரது நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்துஜா, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க காப்பு ஒன்றை ஹரிஷ் கல்யாண் பரிசாக அளித்தார். இது குறித்து ராம்குமார் தனது சமூக வலைத்தளத்தில் ’பிரேஸ்லெட் அணிவது எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால் நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசாக அளித்துள்ளீர்கள். உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி, மேலும் என்னை உங்கள் அன்பு ஸ்பெஷல் ஆக உணர வைத்துள்ளது’ என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த ஹரிஷ் கல்யாண், ‘இது வெறும் ஆரம்பம் மட்டுமே, இன்னும் பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது’ என்று கூறியிருந்தார். இந்த இரண்டு பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Thankyou @iamharishkalyan anna for the token of love which is unexpected🥰. As Bracelet is my favorite accessory to wear, you have remembered that and gifted that to me is so overwhelming😇 Thank you for your delightful gift. And the immense love that makes me feel special..❤️ pic.twitter.com/6pHX76BxBp
— Ramkumar Balakrishnan (@ImRamkumar_B) December 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout