close
Choose your channels

பிக்பாஸ் போட்டியாளருக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று கமல்ஹாசன் உள்பட பலர் கூறிவந்தனர். ஆனால் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் வின்னரான ஆரவ்வுக்கும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வின்னரான ரித்விகாவிற்கும் இன்னும் குறிப்பிட்டு சொல்லும்படி எந்தப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கவர்ந்த ஓவியாவிற்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவரான ஹரிஷ் கல்யாணுக்கு ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்கள் வெளியாகி, அவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்

இந்த நிலையில் தற்போது அவர் நடித்த புதிய திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தனுசு ராசி நேயர்களே’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு உதவி செய்துள்ளார்

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிகை Digangana Suryavanshi நடித்துவரும் இந்த படத்தில் ‘பிகில்’ புகழ் ரெபாமோனிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் முனிஷ்காந்த், ரேணுகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கோகுலம் கோபாலன் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.