லவ் பண்றதே பைத்தியக்காரத்தனம் தான்: 'தாராள பிரபு' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

பாலிவுட் திரையுலகில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'டோனார்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ’தாராளப் பிரபு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் டிரெய்லரே அனைவரையும் கவரும் வகையில் இருப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெர்ம் டோனார் கதையம்சம் குறித்த திரைப்படம் தமிழுக்கு புதிது என்பதால் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெர்ம் டொனேட் செய்யும் ஒரு இளைஞருக்கு அவனது குடும்பத்தினர் கொடுக்கும் ஆதரவும் காதலியால் ஏற்படும் பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. ஸ்பெர்ம் டோனராக ஹரிஷ் கல்யாண், டாக்டராக விவேக் நடித்திருக்கும் இந்த படம் இருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சத்துடன் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் பாலிவுட்டை போல் கோலிவுட்டிலும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.