close
Choose your channels

சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்!

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய இரண்டு படங்களும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜெர்ஸி', 'தனுசு ராசி நேயர்களே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனார்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'விக்கி டோனார்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும், யாமி கவுதம் கேரக்டரில் பிரபல நடிகை ஒருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு 'தாராள பிரபு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.