சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்!

  • IndiaGlitz, [Monday,May 27 2019]

பிக்பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய இரண்டு படங்களும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜெர்ஸி', 'தனுசு ராசி நேயர்களே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனார்' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'விக்கி டோனார்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும், யாமி கவுதம் கேரக்டரில் பிரபல நடிகை ஒருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கு 'தாராள பிரபு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் கொடுத்த விருந்து!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ஆம் தேதி ஆட்டோ டிரைவர்களுக்கு தளபதி விஜய் விருந்தளிப்பதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்

ஒரே டேக்கில் ஓகெ செய்த விஜய்! பிரபல வில்லன் நடிகர் பாராட்டு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளதால்

திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர் கைது

பிரபல நடிகை ஒருவரை இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் தன்னை திருமணம் செய்யுமாறு மிரட்டிய நிலையில் போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர்

காதலை உறுதி செய்த த்ரிஷா! காதலன் யார்?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது தான் காதலில் விழுந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.

சூர்யாவின் 'என்.ஜி.கே'வுடன் இணையும் கார்த்தியின் 'கைதி'!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும்  பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.