close
Choose your channels

பிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம் 

Thursday, February 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானிசங்கர் நடித்துவரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. இதனை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் அதன்பின் பிரியாணி விருந்துடன் இந்த படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடினார்கள். இந்த பிரியாணியை நாயகன் ஹரிஷ் கல்யாண் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது: ஒரு தரமான படம் அது எடுக்கப்படும்போதே அதன் பாதிப்பை சுற்றத்தில் ஏற்படுத்திவிடும் என்பார்கள். எங்களின் படப்பிடிப்பில் அது முற்றிலும் உண்மையானது. படப்டிபிடிப்பு முழுதுமே உற்சாகமாக, உணவு, கொண்டாட்டம், துள்ளல் என நிரம்பியிருந்தது. மேலும் ஹரிஷ் கல்யாண் நகைச்சுவையாக இப்படத்தால் எங்கள் படக்குழுவில் பலர் உணவுப்பிரியர்களாக மாறிவிட்டனர்.

ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானிசங்கர் இருவருமே தங்கள் நடிப்பு தொழிலில் மிகவும் நேர்த்தியை கொண்டிருப்பவர்கள். சினிமா மீது காதல் கொண்டு அர்ப்பணிப்புடன் உழைப்பவர்கள். ஹரீஷ் கல்யாண் கொண்டிருக்கும் பிம்பமானது எந்தவித கஷ்டமும் இல்லாமல் எளிதில் சாக்லெட் பாய் அவதாரம் எடுத்துவிடக்கூடியது. ஆனால் அவர் தன் தளத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் புதிதான அவதாரத்தை முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ரொமான்ஸ் காமெடி படம் என்றாலும் எல்லோர் வீட்டிலும் உலவும் கனவுகளை துரத்தும் நம் வீட்டு பையன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

நாயகி பாத்திரத்திற்கு குறிக்கோள்கள் கொண்ட, தன்னம்பிக்கை மிக்க எழுச்சியான பெண் தேவைப்பட்டது. ப்ரியா பவானிசங்கர் வெகு எளிதாக இக்கதாப்பாத்திரத்தை செய்துவிட்டார். தமிழ் பேசும் நாயகியுடன் வேலை செய்வது, எந்த ஒரு தமிழ் இயக்குநருக்கும் சந்தோஷம் தரும். ப்ரியா பவானிசங்கருடன் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பல உயரங்களுக்கு செல்லும் திறமை கொண்டவர் அவர்’ என்று தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.