கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’, இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபல நடிகர்கள் அவ்வப்போது இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நடிகர் ஹரிஸ் பெராடி இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் தற்போது நடைபெறும் வரும் கோவை படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தில் ஹரிஸ் பெராடி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ’கைதி’ திரைப்படத்தை விட ‘விக்ரம்’ திரை படத்தில் அவருக்கு முக்கிய வேடம் என்றும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்

உள்ளே வெளியே டாஸ்க், பாகற்காய் ஜூஸ்: மீண்டும் மோதும் நிரூப்-வருண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 46 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் 'உள்ளே வெளியே' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன

ஒருவருட போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: வேளாண் சட்டம் வாபஸ் குறித்து பிரபல ஹீரோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக போராட்டம் செய்து வருகின்றனர்

கிரிக்கெட் இருந்து ஓய்வுபெறும் “மிஸ்டர் 360“… ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் உலகில் “மிஸ்டர் 360“, “சூப்பர் மேன்“, “360 டிகிரி பேட்ஸ்மேன்“ என்று பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்த ஏபி டி வில்லியர்ஸ்