ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து, நூலிழையில் உயிர் பிழைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

ஹரியாணா மாநிலத்தில் தண்டவளாத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் திடீரென வந்துவிட்ட ரயிலைப் பார்த்து அதிச்சி அடைந்து தண்டவாளத்திலேயே நின்று இருக்கிறார். பின்னர் அருகில் இருந்தவர்கள் படுத்துக் கொள்ளுமாறு கூறியதை அடுத்து ரயில் தண்டவாளத்திலேயே படுத்து நூலிழையில் உயிர் பிழைத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

ஹரியாணா மாநிலத்தில் கடந்த 17 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தை ஒட்டி சிக்னலுக்காக காத்திருந்த பெண் ஒருவர் சிக்னல் போடப்படாமல் இருந்ததால் தண்டவாளத்தை கடந்து நடந்து சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று இருந்த ரயில் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் ரயில் தண்டவாளத்திலேயே நின்று விட்டார்.

இதனால் அங்கிருந்தவர்கள் பெண்ணை தண்டவாளத்திலேயே படுத்துக் கொள்ளுமாறு கத்தி உள்ளனர். இந்தக் குரல்களைக் கேட்ட அப்பெண் ஒருவழியாக நிதானம் அடைந்து தண்டவாளத்திலேயே படுத்துக் கொண்டார். பின்னர் ரயில் சென்றவுடன் அப்பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

எம்.ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை மீண்டும் ஒரு அப்டேட்!

ஜீவா நடித்த 'சிவா மனசுல சக்தி' ஆர்யா நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் எம் ராஜேஷ்

பிக்பாஸ் சீசன் 3 பிரபலத்தை காதலிக்கின்றாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை?

ராதிகாவின் 'வாணி ராணி' என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் அம்மா என்னை திட்டியது சரிதான்: ஷிவானியின் மனம் திறந்த பேட்டி!

என்னுடைய அம்மா என்னை திட்டியது சரிதான் என்றும் அந்த அளவிற்கு நான் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தேன் என்றும் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மனம் திறந்து கூறியுள்ளார் 

நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் சுரேஷ் நடிக்கும் படம்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஏற்கனவே திரைப்படங்களில் நடிக்க

பெண்ணிடம் முத்தத்தை லஞ்சமா பெற்ற போலீஸ்… வசமா சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

பெரு நாட்டில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பெண்ணிடம் இருந்து அபராதத் தொகைக்குப் பதிலாக முத்தத்தை லஞ்சமாகப் பெற்று சர்ச்சையில் மாட்டி உள்ளார்.