close
Choose your channels

'மழை பிடிக்காத மனிதன்’: விஜய்காந்த் காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததா?

Saturday, June 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்த ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்ததால் அவருடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

விஜய் ஆண்டனி, சரத்குமார், தனஞ்செயன், மேகா ஆகாஷ் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவா டையூ டாமன் ஆகிய பகுதிகளில் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறு காட்சியில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த கூறியபோது ’விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை என்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது காட்சியின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது என்றும் இருப்பினும் விரைவில் அவருடைய காட்சியை படமாக்குவோம் என்றும் நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.