600-ல் ஹாட்ரிக். வரலாறு படைத்தது இந்திய கிரிக்கெட் அணி.

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி சற்று முன் வரை 163 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 660 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராத்கோஹ்லி 204 ரன்களும், முரளிவிஜய் 108 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக மூன்று முறை 600 ரன்களுக்கு மேல் அடித்து வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4வது போட்டியில் 631 ரன்களும், 5வது போட்டியில் 759 ரன்களும் இந்திய அணி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை எந்த நாட்டு அணியும் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 600 ரன்களுக்கு மேல் அடித்தது இல்லை என்பதால் இந்திய அணியின் வரலாற்று சாதனை முக்கியத்துவம் பெறுகிறது.

More News

அமைச்சர் செல்லூர் ராஜூவை சிறை வைத்துள்ளரா சசிகலா? போலீசில் அதிர்ச்சி புகார்

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் ஈசிஆரில் உள்ள சொகுசு ரிசார்ட் ஒன்றில் சிறை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைபிடித்து வைத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவினர்களும், தமிழக மக்களும் அதி

அதிமுகவில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. மதுசூதனன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில் இன்று அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து சசிகலா நீக்கியுள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நீக்கம். புதிய அவைத்தலைவர் யார்?

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று முதல்வர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்

வித்தியாசமான போஸ் கொடுத்த பிரபல நடிகை கைது.

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட்

ஓபிஎஸ் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது. சி.ஆர்.சரஸ்வதி

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவரான சி.ஆர்.சரஸ்வதி தனக்கு மிரட்டல் வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.