அடுத்த 12 மணி நேரத்தில்... நிவர் புயலால் சென்னைக்கு ஏற்படும் பாதிப்புகள்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக ‘நிவர்’ புயல் உருவானது சற்றுமுன் உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த புயலின் காரணமாக சென்னை உள்பட கடலோர பகுதிகளில் கனமழை கடந்த சில மணி நேரங்களாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடப்பதற்கு 12 நேரத்திற்கு முன்பும், கரையை கடந்த பின்பும் உருவாகும் சேதம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக அடுத்த 12 மணி நேரங்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் என்றும், அதன்பின் புயலின் போதும் நல்ல மழை பெய்யும் என்றும், புயல் கரையை கடந்த பின்னரும் ஒருசில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் சாலைகள் மழைநீரால் மூழ்க வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் கூடுமானவரை வரை இருசக்கர வாகனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் செம்பரப்பாக்கம் உள்பட ஒருசில நீர்நிலைகள் மொத்த கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் பெய்யும் கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் திறந்துவிட வாய்ப்பு இருப்பதால் சென்னை வெள்ளத்தில் மிதக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சென்னையில் மழை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது என்பதும், போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இதுவரை அரசு எடுத்துள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் யார் யார்? நேருக்கு நேர் போட்டுடைத்த பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் இருப்பதை முதல்முதலில் போட்டு உடைத்தவர் சுரேஷ் தான் என்றாலும் அதன் பிறகு குருப்பிஸம் இருப்பதாக அவ்வப்போது வலியுறுத்தி வருபவர்கள்

நாமினேஷனில் திடீர் திருப்பம்: அனிதாவுக்கு பதிலாக சிக்கிய போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேசன் படலம் நடந்த நிலையில்  அனிதா, பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

உருவானது நிவர் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த மண்டலமாக உருவாகியதால் இன்று நிவர் புயல் உருவாகும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த

நிவர் புயல் எதிரொலி: 7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் நாளை  மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை?

வங்கக் கடலில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால்