பிபிஈ உடையணிந்து நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பிபிஈ உடை வழங்குவது வழக்கமாக உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களை பாதுகாக்க இந்த உடை பெரிதும் உதவியாக இருக்கும்

இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த பிபிஈ உடை போன்ற உடையை அணிந்து பிரபல நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் குறித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

காவல் துறையினர் விரைந்து வந்து நகைக்கடையை சோதனை செய்தனர். அதன் பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் போல் பிபிஈ உடை அணிந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்த காட்சி அதில் இருந்தது. தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை அணிந்து கொள்ளையர்கள் ஷோகேசில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த நகைக்கடையில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு 780 கிராம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பிபிஈ உடை அணிந்து கொள்ளையடித்த கொள்ளையர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

'குட்டி ஸ்டோரி' பாடலின் 'தல' வெர்ஷன்: இணையத்தில் வைரல்

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு இன்று 39 ஆவது பிறந்தநாள். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை நள்ளிரவு 12 மணி முதல்

அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகங்களை தான் விற்க வேண்டும்: பிரபல நடிகரின் ஷாக் பேட்டி

மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டணம் வந்திருப்பதாகவும் இந்த மாதம் தனது ஓவியங்களை விற்று மின் கட்டணத்தை கட்டியதாகவும்

'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்

திருமணமான இரண்டே மாதங்களில் காதல் மனைவி 'செத்துப்போ'என கூறியதை அடுத்து மனம் உடைந்த கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவை அடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் தடையா? டிக்டாக் நிறுவனத்திற்கு சிக்கல்

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

தங்கிய ஹாஸ்டல் திருமணம் செய்து கொண்ட காதல் மருத்துவர்கள்: நண்பர்கள் வாழ்த்து

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடத்தப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.