close
Choose your channels

பாலா - சூர்யா படத்தில் இணையும் பழம்பெரும் பாலிவுட் நடிகை?

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இந்தநிலையில் பழம்பெரும் பாலிவுட் நடிகை ஹேமாமாலினி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

நடிகை ஹேமாமாலினி தமிழில் கடந்த 1963ஆம் ஆண்டு ‘இது சத்தியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார் என்பதும், கமலஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் மட்டும் அவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யா-பாலா படத்தில் ஹேமாமாலினி நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos