close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 165வது படத்தின் மாஸ் டைட்டில் இதோ

Friday, September 7, 2018 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ரஜினியின் 165வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் மாஸ் டைட்டில்  'பேட்ட' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ் டைட்டில் அறிவிக்கப்பட்ட சில் நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.