close
Choose your channels

கேம் விளையாடினால் கேட்டது கிடைக்கும்: 'ஹீரோ' படக்குழு அறிவிப்பு

Monday, November 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் புரடொக்சன்ஸ் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘ஹீரோ’ படக்குழுவினர் சமீபத்தில் இந்த படம் குறித்த ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை வெளியிட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த கேமை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்பட பலர் டவுன்லோடு செய்து ஆர்வத்துடன் விளையாடி வரும் நிலையில் இந்த கேமில் இறுதி வரை சென்று வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருப்பதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும் படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.