நீச்சல் குளத்தில் தவறிவிழுந்த நண்பனை துரித வேகத்தில் காப்பாற்றிய 3 வயது சிறுவன்!!! வைரலாகும் வீடியோ!!!

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

 

பிரேசில் நாட்டில் 3 வயது சிறுவன் ஆர்தர் டி ஒலிவியரா நீச்சல் குளத்தில் தவறி விழுந்த தன்து நண்பனை காப்பாற்றி தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறான். இதுகுறித்து சிசிடியில் பாதிவான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் இடாபெருனா பகுதியில் 3 வயது குழந்தையான ஆர்தர் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருக்கிறான். ஒரு பந்தை குளத்தில் போட்டு தண்ணீரை தள்ளிவிட்டு விளையாடி கொண்டிருக்கிறான். ஆர்தருடன் விளையாட ஹென்ரிக் என்ற 3 வயது சிறுவன் ஆர்வமாக வருகிறான்.

ஆர்தரின் பந்தை நீச்சல் குளத்திற்குள் தள்ள ஹென்ரிக் தண்ணீரை கையால் தள்ளுகிறான். இப்படி செய்யும்போது தவறுதலாக சிறுவன் ஹென்ரிக் நீச்சல் குளத்தில் விழுந்து விடுகிறான். ஹென்ரிக் குளத்தில் விழுந்தவுடன் ஆர்தர் செய்வதறியாது அக்கம் பக்கத்தில் பாக்கிறான். உடனே துரிதமாகச் செயல்பட்டு தனது நண்பனை இறுகப்பிடித்து இழுத்து மேலே கொண்டு வருகிறான். ஆர்தரின் உதவியுடன் நீச்சல் குளத்தில் இருந்து மேலே வருகிறான் ஹென்ரிக். இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஆர்தரின் தயார் டிவிட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சி பொங்க மகனுக்கு பாராட்டை தெரிவித்து இருக்கிறார். இதை அறிந்த உள்ளூர் காவல் துறை பாராட்டு பத்திரத்தோடு ஆர்தரைச் சந்தித்து இருக்கிறது. பாராட்டு பத்திரம் மட்டுமல்லாது கூடை நிறைய இனிப்பு மற்றும் கூடை பந்து ஒன்றையும் பரிசாக வழங்கியிருக்கிறது. சமூக வலைத்தளப் பக்கத்திலும் ஆர்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

More News

பூமியை நோக்கி அசுர வேகத்தில் வரும் கோள்… பதற வைக்கும் தகவல்!!!

பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்றும் அது பூமிமீது மோதினால் பயங்கர ஆபத்தினை  ஏற்படுத்தும் என்றும் கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

'தளபதி 65' படத்தின் நாயகியாகும் 'பாகுபலி' நாயகி?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படம் 'தளபதி 65'. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்

வனிதா எனக்கு அம்மா மாதிரி: டிஸ்சார்ஜ் ஆகி வந்த பீட்டர்பால் வெளியிட்ட வீடியோ

சமீபத்தில் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பீட்டர்பால் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்

கடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!!!

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிகக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா குடும்பத்துக்கே ஆப்பு வைக்கும் புதிய தடுப்பூசி!!! விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!!!

மனிதன் மற்றும் விலங்கு இனத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பல வகையான நோய்த்தொற்றுகள் காலந்தோறும் பரவி வருகிறது.